மக்கள் அறிவியலாளர்களுக்கு (Citizen Scientist) சுய விளக்கமளிக்கும் கேள்விகள் -
1. மக்கள் அறிவியலாளர் (Citizen Scientist) யார்?
- விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், இளைஞர் குழுக்கள், டெல்டாவில் வசிக்கும் மற்றும் டெல்ட்டாவை பற்றி புரிதல் உள்ளவர்களாக இருக்கலாம்.
2. மக்கள் அறிவியல் திட்டம் (Citizen Science Program) எதைப் பற்றியது?
- காவிரி டெல்டா பகுதியில் வாழும் மக்களின் ஈடுபாடு மற்றும் பங்கேற்பை உள்ளடக்கியது. மக்கள் அறிவியல் திட்டம் (Citizen Science Program) என்பது பொதுமக்கள் மற்றும் குடிமக்கள், விஞ்ஞான ஆய்வாளர்களாக தங்கள் பகுதியைப் பற்றிய அறிவையும் தகவலையும் பங்களிப்பதாகும். (எடுத்துக்காட்டாக - டெல்டா பகுதி மற்றும் அதன் நீர் ஆதாரத்தின் மாற்றங்கள்).
3. நாம் ஏன் இதை செய்கிறோம்?
-காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரின் ஆழம் மற்றும் அதன் உப்புத்தன்மையைப் பற்றி மக்கள் அறிவியலாளர்களின் (Citizen Scientist) ஈடுபாட்டின் மூலம் புரிந்து கொள்வதற்காக. இந்த ஆய்வின் மூலம் டெல்டாவின் தற்போதய சூழ்நிலைப் பற்றிய புரிதலுக்கு வெளிப்படையான ஆன்லைன் டாஷ்போர்டு (dashboard) வடிவத்தில் பெறப்பட்டு, டெல்டாவினை பற்றி முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் இருக்கும்.
4. இதன் ஒரு பகுதியாக யார் பங்கேற்க முடியும்)?
- காவிரி டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மற்றும் டெல்டாவை பற்றி புரிதல் உள்ள எவரும்.
5. நீங்கள் இதில் எப்படி பங்கேற்க இயலும்?
-இதில் பங்கேற்க கூகுல் ப்லே ஸ்டோர் (Google Play Store)-இல் இருந்து “ODK app”ஐ பதிவிறக்குவதன் மூலமே. அதை பதிவிறக்கி இன்ஸ்டால் (install) செய்த பின், கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்நுழைவு சான்றுகளை (installation credentials) வழங்கவும். அதனை வழங்கிய பின் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், பின்வரும் வீடியோவை யூடியூப் இணைப்பில் சரிபார்க்கவும்.